Tamil Sanjikai

கூகுள் நிறுவனம் உலகெங்கிலும் 18 புதிய எரிசக்தி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 2 பில்லியன் டாலருக்கும் அதிகமானவை. இவை நிறுவனத்தின் உள்கட்டமைப்பை உருவாக்க உதவும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஒப்பந்தங்கள் கூகிளின் உலகளாவிய காற்று மற்றும் சோலார் ஒப்பந்தங்களின் போர்ட்ஃபோலியோவை மேலும் 40 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரிக்க உதவும். அதுமட்டுமின்றி கூடுதலாக 5,500 மெகாவாட் வரை மின் உற்பத்தியும் செய்கிறது. இன்னும் கொஞ்ச்ம் ஆழமாக பார்த்தால் இதனால் கிடைக்கக்கூடிய சக்தி, 1600 மெகாவாட் மின்சார சக்தியாகும்.

கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை அவர்களின் அறிக்கையின்படி, "இந்த திட்டங்கள் அனைத்தும் ஆன்லைனில் வந்தவுடன், கார்பன் இல்லாத எரிசக்தி கிடைப்பது மட்டுமின்றி வாஷிங்டன் போன்ற இடங்களுக்கு தேவையானதை விட அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் அல்லது லித்துவேனியா, உருகுவே போன்ற போன்ற நாடுகள் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவுக்கு இணையாக மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

இந்த புதிய ஒப்பந்தத்தின்படி அமெரிக்கா, சிலி மற்றும் ஐரோப்பாவில் கணிசமான முதலீடுகள் செய்ய கூகுள் திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவின் தேவைக்கு குறிப்பாக வடக்கு கரோலினாவின் (155 மெகாவாட்), தெற்கு கரோலினாவில் (75 மெகாவாட்) மற்றும் டெக்சாஸ் நகரில் (490 மெகாவாட்) ஆகிய அளவுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அளவு, உலகில் சோலார் மூலம் கிடைக்கும் மின் திறனைவிட அதிகம் ஆகும்.

மேலும் இந்த ஒப்பந்தத்தின்படி சோலார் எனர்ஜியால் வரும் மின்சக்தி மட்டுமல்ல, காற்றினால் கிடைக்கும் மின்சக்தியையும் சேர்த்துதான் என்பது குறிப்பிடத்தக்கது என சுந்தர் பிச்சை மேலும் தெரிவித்துள்ளார். காற்றின் மூலம் பெரும்பாலான எரிசக்தி கிடைப்பதாகவும், சோலார் எனர்ஜியில் கிடைக்கும் செலவும் குறைந்து வருவதாகவும் கூறிய அவர் மொத்தத்தில் குறைந்த செலவில் நிறைந்த மின்சக்தி கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

0 Comments

Write A Comment