Tamil Sanjikai

டிடிவி தினகரனின் அமமுகவில் இருந்து விலகி திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பொன்னாடை அணிவித்து திமுகவில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்து உறுப்பினர் பதிவேட்டில் செந்தில் பாலாஜி கையெழுத்து இட்டார்.

இது தொடர்பாக டிடிவி தினகரன், யாரையும் பிடித்து வைக்க முடியாது, செந்தில் பாலாஜி எங்கிருந்தாலும் வாழ்க. சொந்த பிரச்சனைகளால் ஒதுங்கி இருக்கிறேன் என்று கூறிய செந்தில் பாலாஜி, திமுகவிற்கு சென்றுவிட்டார். செந்தில் பாலாஜி சென்றதால், அமமுகவிற்கு பாதிப்பில்லை.அவர் கட்சியை விட்டு சென்றதில் எந்த கவலையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

திமுகவில் இணைத்து கொண்ட செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசும் போது , ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஆட்சி தமிழக மக்களின் நலனுக்கு எதிரானது என்று குற்றம் சாட்டினார். கரூர் மக்களின் விருப்பத்துக்கு இணங்கவே தான் திமுகவில் இணைந்தேன்.மு.க.ஸ்டாலினை தமிழக முதலமைச்சராக்க மக்கள் தயாராக உள்ளனர். கடந்த ஒரு மாதமாக அமமுகவின் எந்த செயல்பாட்டிலும் தான் ஈடுபடவில்லை. திமுகவில் சேருவது குறித்து ஒரு மாதத்துக்கு முன்பே முடிவு செய்துவிட்டேன். அமமுக நிர்வாகிகள் பற்றி விமர்சிக்க மாட்டேன். தம்முடன் பணியாற்றியவர்களை விமர்சிப்பது பண்பு ஆகாது. ஈபிஎஸ், ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக ஒரு மூழ்கும் கப்பல் என்று விமர்சித்தார்.

0 Comments

Write A Comment