அமித்ஷாவும், மோடியும், கிருஷ்ணன் - அர்ஜூனன் போன்றவர்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவர்களின் பணி குறித்த ஆவணப் புத்தகம் ஒன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று வெளியிடப்படுகிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த புத்தகத்தினை வெளியிடுகிறார்.
சென்னையில் இருக்கும் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வரும் இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். நடிகர் ரஜினிகாந்த்தும் பங்கேற்றார். இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது:-
மக்கள் மீது மிகவும் அக்கறை கொண்டவர் வெங்கையா நாயுடு. வெங்கையா நாயுடு முற்றிலும் ஆன்மீகவாதி. தப்பித்தவறி அரசியல்வாதி ஆகிவிட்டார்" என்றார்.
காஷ்மீர் விவகாரம் பற்றி பேசிய ரஜினிகாந்த், அமித்ஷாவும் மோடியும், கிருஷ்ணன் அர்ஜூனனை போன்றவர்கள். யார் கிருஷ்ணன், யார் அர்ஜூனன் என்பது அவர்களுக்கே தெரியும். காஷ்மீர் விவகாரத்திற்காக அமித்ஷாவுக்கு வாழ்த்துக்கள் காஷ்மீரை இரண்டாக பிரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது” என்றார்.
0 Comments