சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படத்தின் மோஷன் போஸ்டரை கமல்ஹாசன், சல்மான்கான், மோகன்லால் ஆகியோர் இன்று வெளியிடவுள்ளனர்.
தமிழ், தெலுங்கு போஸ்டரை கமல்ஹாசனும், மலையாளம் போஸ்டரை மோகன்லாலும், இந்தியில் சல்மான் கானும் வெளியிடவுள்ளதாக அப்படத்தின் இயக்குநர் முருகதாஸ் தெரிவித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள தர்பார் படத்தின் தீம் மியூசிக்கும் நாளை வெளியிடப்படுகின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.
‘தர்பார்’ படத்தின் மோஷன் போஸ்டர், தீம் மியூசிக் ஆகியவை கமல்ஹாசன் பிறந்தநாளான நாளை வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments