Tamil Sanjikai

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மற்றும் அந்த அணியின் தேர்வுக்குழு தலைவராக முன்னாள் கேப்டன் மிஸ்பா உல்-ஹக் நியமிக்கப்பட்டுள்ளார்.

பயிற்சியாளர் பதவிக்கு கடைசி நேரத்தில் மிஸ்பா உல்-ஹக் விண்ணப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும். 2019 உலக க்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறிதை தொடர்ந்து, அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தரின் ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment