Tamil Sanjikai

கரூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான 61-வது குடியரசு தின விழா போட்டிகளுக்கான தொடக்க விழா வெண்ணெய்மலை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் நடந்த இந்த விழாவில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பாப்பாசுந்தரம் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், விளையாட்டுத் துறையும் கல்வித்துறையும் மேம்பாடு அடையும் வகையில் டிசம்பர் மாத இறுதிக்குள் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படும். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ-மாணவியருக்கான இலவச மடிக்கணினி வரும் ஜனவரி முதல் வாரம் முதல் வழங்கப்படும் என்று கூறிய அமைச்சர், டிசம்பர் மாத இறுதிக்குள் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட்டு, அத்துடன் வளைதள இணைப்புகளும் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

0 Comments

Write A Comment