திருநெல்வேலியில், கொள்ளையர்கள் இருவரை, வயதான தம்பதியர் துணிச்சலாக போராடி துரத்திய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது, மேலும் இந்த வீடியோ இணையத்தளத்தில் வேகமாக பரவி வைரல் ஆகி வருகிறது..
திருநெல்வேலி மாவட்டம், கடையம் கல்யாணிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகவேல். இரவு நேரம், இவர் தனது பண்ணை வீட்டின் வெளியே உட்கார்ந்திருந்தபோது, அங்கு வந்த முகமூடி கொள்ளையர்களில் ஒருவர், துணியால் சண்முகவேலின் கழுத்தை இறுக்க முயன்றார். அப்போது அவர் கூச்சலிட்ட சத்ததைக் கேட்டு வெளியே வந்த அவரது மனைவி செந்தாமரை, பிளாஸ்டிக் நாற்காலிகள் மற்றும் காலணிகளை தூக்கி எறிந்து, கொள்ளையர்களை விரட்டி தனது கணவரை காப்பாற்றினார்.
ஆனால், பின்னரும் அங்கிருந்து ஓடாத கொள்ளையர்கள், அரிவாளை காட்டி மிரட்டியுள்ளனர். அவர்களின் மிரட்டலுக்கு சிறிதும் அஞ்சாத கணவனும், மனைவியும் கையில் கிடைத்த பொருட்களை எல்லாம், தூக்கி கொள்ளையர்கள் மீது வீசி, அவர்களை அங்கிருந்து ஓட வைத்தனர். இந்த பரபரப்பான காட்சிகள், வீட்டிலிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.இது தற்போது இணையத்தளத்தில் வேகமாக பரவி வேகமாக பரவி வைரல் ஆகி வருகிறது..
இந்த சம்பவத்தில் முதியவர் செந்தாமரைக்கு மட்டும் காயம் ஏற்பட்டது மட்டுமின்றி அவர் அணிந்திருந்த 4 சவரன் நகையையும் கொள்ளையர்கள் பறித்துச் சென்றுள்ளனர். கொள்ளையர்களை துணிச்சலுடன் விரட்டிய இந்த வயதான தம்பதியை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
0 Comments