Tamil Sanjikai

ஆப்பிரிக்க தீவுகளில் ஒன்றான கேப் வெர்டேவில் ஒன்பதரை டன் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது, அதை போலீசார் தீயிட்டு அழித்தனர்.

தென் அமெரிக்கா, மொராக்கோ வழியாக கொகைன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் வெர்டே தீவு வழியாக கடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் கொகைன் உள்ளிட்ட ஒன்பதரை டன் எடையுள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக 11 ரஷ்யர்களை வெர்டே அரசு பிடித்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன.

0 Comments

Write A Comment