அம்பாசமுத்திரம் மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியளித்துள்ளனர். அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக அருவில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். மணிமுத்தாறு அருவியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 3 மாதங்களுக்கு முன் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் மணிமுத்தாறு அருவி சுற்றுலா பயணிகளின் மனதை மிகவும் கவர்ந்த அருவியாகும். ஒகி புயலால் எற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது சுற்றுலா பயணிகள் குளிக்கும் பகுதியிலுள்ள தரை மற்றும் தடுப்பு கம்பிகள் கடும் சேதம் அடைந்தது. இதனால் சேதம் அடைந்த அருவியின் பெரும் பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்லாதிருக்க தடுப்பு சுவர் கட்டப்பட்டது. இதனால் ஆண்களும் பெண்களும் ஒரே இடத்தில் குளித்து வருகின்றனர்.
இதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் விடுத்த கோரிக்கையையடுத்து வனத்துறையினர் அருவி பகுதியை முற்றிலும் சீரமைக்க முடிவு செய்தனர். அதன்படி சீரமைப்பு பணி தொடங்கியதால் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் மணிமுத்தாறு வழியாக மாஞ்சோலை முதல் குதிரை வட்டி வரை இயக்கப்படும் அரசு பஸ் செல்ல தடையில்லை. இது போல் தனியார் சுற்றுலா வாகனங்கள் மாஞ்சோலை வரை முன் அனுமதி பெற்று செல்ல வனத்துறையினர் அனுமதி அளித்திருந்தனர். இந்நிலையில் நீர்வரத்துகுறைந்ததை அடுத்து 3 மாதங்களுக்குப்பிறகு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
0 Comments