உதகை தாவரவியல் பூங்காவில் மீண்டும் திறக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகை, சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. அங்கு வைக்கப்பட்டுள்ள பல வண்ண மலர்களை பார்வையாளர்கள் கண்களுக்கு விருந்து படைப்பதாக அமைந்துள்ளது, பலரும் அதன் அழகை ரசித்து செல்கின்றனர்.
இயற்கை எழில் கொஞ்சும் அழகை ரசிக்கவும், அங்கு நிலவும் தட்பவெப்ப நிலையை அனுபவிக்கவும், சுற்றுலா பயணிகள் உதகையை நாடி வருவது வழக்கம். இங்குள்ள தாவரவியல் பூங்காவில் உள்ள பசுமை போர்த்திய புல்வெளிகளும், பூத்துக்குலுங்கும் மலர்களும், பார்வையாளர்களை மயக்குகின்றன.
பூங்காவில் 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட கண்ணாடி மாளிகை, முற்றிலும் சேதமடைந்த நிலையில், தற்போது மீண்டும் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டிருப்பது சுற்றுலா பயணிகளை மகிழிச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கண்ணாடி மாளிகையில் ஊடுருவும் சூரிய ஒளியில், பால்சம், கார்னேசன், ஆர்கிட், வில்லியம், கள்ளிப்பூ, பெட்டுனியா போன்ற மலர்கள் பூத்துக் குலுங்குவதை சுற்றுலா பயணிகள் பார்த்து, பார்த்து குதூகலிக்கின்றனர். குறிப்பிட்ட வெப்ப நிலையல் வளரும் மலர்களை கண்டு ரசிக்கும் மக்கள், புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வம் காட்டுகின்றனர்.
0 Comments