Tamil Sanjikai

சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஒரு லட்சத்து 4 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ள புலிகள் காப்பகத்தில் 7 வனச்சரங்கள் உள்ளன.

ஆண்டுக்கு இருமுறை மழைபொழிவுக்கு முன், பின் என இங்கு கணக்கெடுப்பு நடத்தப்படும். இதன்படி, மழைக்காலத்திற்கு பின் நடத்தப்படும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு இன்று முதல் தொடர்ந்து 6 நாள்கள் நடத்தப்பட உள்ளது.

இதற்கான சிறப்பு பயிற்சி வகுப்பு சத்தியமங்கலம், ஆசனூர் வனச்சரக அலுவலகங்களில் நடைபெற்றது. இந்த ஆண்டு காகிதமில்லா தகவல் பரிமாற்றம் முறையாக செல்போனில் பதிவேற்றம் செய்து அனுப்பும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கென புதியாக எம்.ஸ்டிரப் எனப்படும் மென்பொருள் பதிவிறக்கம் செய்யப்பட்ட செல்போன் வனஊழியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. 5 கிமீ பரப்பளவிற்கு கண்ணில் தென்படும் வனவிலங்குகள், தாவரங்கள், நிலைகள், மரங்கள் என அனைத்தும் குறிப்பு எடுத்து அனுப்புவது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

அதன் படி இன்று காலை சத்தியமங்கலம் வனச்சரகத்திற்குட்பட்ட பண்ணாரி வனப்பகுதியில் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. அப்போது புலியின் கால்தடம், கரடி கால்தடம் போன்றவற்றை கணக்கிட்டன. சத்திமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள 7 வனச்சரகங்களில் 60 குழுக்களாக 350க்கும் மேற்பட்ட வனச்சரக பணியாளர்கள் கலந்துகொண்டு கணக்கிடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

0 Comments

Write A Comment