காற்றோடு கார் புணர்ந்து
வான்மகள் பிரசவித்த நீர்க்குழந்தை.
குழந்தையர்க்குத் தோது.
குடியானவனுக்குக் கேது.
கூரையற்றோனின் கூன் படுக்கை.
கூடலுற்றோனின் தேன் குடுக்கை.
ஆடையற்றோனின் அரை நரகம்.
ஆளற்றோனின் ஐந்துதலை அரவம்.
கவிஞனுக்குக் கலைக் கிரகம்.
காதலர்க்குத் தலைக் கரகம்.
வாய்நோக்கியின் தேனீர்க் காரணி.
வண்டுகளின் தேனெடுப்புப் பேரணி.
இன்னார்க்கென்றல்லாது
எல்லார்க்கும் பெய் மழையே!
- பிரபு தர்மராஜ்.
0 Comments