சேலம் மாவட்டம் கருமந்துரை மலைப்பகுதிகளில் உள்ள 20 கிராமங்களில், போலீசார் மற்றும் வருவாய் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம் கருமந்துரை மலைப்பகுதிகளில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வந்த ரகசிய தகவலையடுத்து, போலீசார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் 20 கிராமங்களில் இன்று காலை முதல் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் வனத்துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சோதனையின் போது புதரில் இருந்து ஒரு நாட்டு துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து போலீசார் மற்றும் வனத்துறையினர் வீடுகள் மற்றும் தெருக்களில் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments