இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடிக்கும் நிலையில் இருநாடுகள் இடையே இயக்கப்பட்டு வந்த சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை அந்நாடு தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் லாகூரில் இருந்து இந்தியாவின் டெல்லிக்கு இயக்கப்பட்டு வரும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் வழக்கம்போல் இன்று காலை 8 மணிக்கு பாகிஸ்தானின் லாகூரில் இருந்து புறப்பட வேண்டிய ரயில் புறப்படவில்லை.
ஏற்கெனவே மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அந்த ரயிலின் சேவை நிறுத்தப்படாது என கூறியிருந்தார். ஆனால் பதற்றம் நீடிப்பதாலும், பாதுகாப்பு கருதியும் அந்த ரயிலின் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments