7 மக்களவைத் தொகுதிகள் உள்ள டெல்லியில், 4 தொகுதிகளுக்கு பா.ஜ.க ஏற்கெனவே தனது வேட்பாளரை அறிவித்திருந்தது. இந்நிலையில், மேற்கொண்டு 2 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ஜனதா இன்று வெளியிட்டது.
அதன்படி கிழக்கு டெல்லியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீரும், புதுடெல்லியில் மூத்த தலைவர் மீனாட்டி லேகியும் போட்டியிடுகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன் தான் கம்பீர் பா.ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். பிரதமர் மோடியின் கொள்கையை பார்த்து பா.ஜனதாவில் இணைந்ததாகவும். மக்களுக்கு சேவை செய்வதே தனது குறிக்கோள் என்றும் அவர் அப்போது கூறி இருந்தார்.
டெல்லி மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலும் முன்னதாக வெளியிடப்பட்டது. இதன்மூலம், கௌதம் கம்பீர் கிழக்கு டெல்லி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அர்விந்தர் சிங் லவ்லியை எதிர்த்து போட்டியிட உள்ளார்.
0 Comments