மதுரையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில மகளிரணி தலைவி வீடு மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும்
மதுரை பங்கஜம் காலனி பகுதியில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில மகளிர் அணி தலைவி மகாலட்சுமியின் வீடு உள்ளது. நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், அவரது வீட்டில் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பியோடினர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே மற்றும் கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் வீட்டின் வெளிபகுதி மற்றும் வெளியே நிறுத்தி வைத்திருந்த கார் சிறிய அளவில் சேதம் அடைந்தது. இதையடுத்து தகவல் அறிந்த போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments