ஒரு நாட்டின் ஒட்டுமொத்த சுகாதாரத்தை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் உலகின் ஆரோக்கியம் மிகுந்த நாடுகள் பட்டியலை “BLOOMBERG“ நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதில் ஸ்பெயின் முதலிடமும், இத்தாலி 2வது இடத்தையும் பிடித்துள்ளன. ஐஸ்லாந்து, ஜப்பான், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முறையே 3, 4 மற்றும் 5வது இடத்தை பிடித்துள்ளன. கடந்த 2017ம் ஆண்டு 119வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது ஒரு இடம் பின்தங்கி 120வது இடத்தை பிடித்துள்ளது. சீனா 52வது இடத்திலும், இலங்கை 66வது இடத்திலும், பாகிஸ்தான் 124வது இடத்தையும் பிடித்துள்ளன.
ஒரு நபரின் ஆரோக்கியத்துக்காக அமெரிக்கா அதிகளவில் பணம் செலவிடுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 7 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை அமெரிக்கா செலவிடுகிறது
0 Comments