Tamil Sanjikai

விண்வெளியில் செயற்கைக்கோள்களை தாக்கி அழிக்கும் 'மிஷன் சக்தி' எனும் சோதனையை இந்தியா வெற்றிகரமாக 3 நிமிடங்களில் செய்து முடித்தது என பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கான தனது உரையின்போது பேசினார். இந்த சாதனையின் மூலம் அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்து உள்ளது.

செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் விதமான ஏவுகணைகளை தயாரிக்க சில ஆண்டுகளுக்கு முன்புதான் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த 6 மாதங்களாக இதன் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்டது. இதற்காக 100 விஞ்ஞானிகள் இரவு பகலாக உழைத்தனர் என டி.ஆர்.டி.ஓ.வின் தலைவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், விண்வெளி கலத்தை ஏவுகணையால் சுட்டு வீழ்த்தும் ஆற்றல் பல ஆண்டுகளாக நம்மிடம் இருந்து வருகிறது .

இதற்கு முன் இருந்த புத்திசாலி அரசுகள் இந்த ரகசியத்தை காப்பாற்றினார்கள். ஆனால் பா.ஜ.க. அரசு இந்த ரகசியத்தை வெளியிட்டது துரோகம். தேர்தல் நேரத்தில் இந்த ரகசியத்தை வெளியிட வேண்டிய அவசியம் என்ன? தோல்வி பயமே காரணம் என்று தெரிவித்துள்ளார்.

0 Comments

Write A Comment