Tamil Sanjikai

தமிழகத்தில் பிரபல நடிகர்களின் படம் ரிலீஸ் என்றாலே திருவிழா போல, திரையரங்குகள் ரசிகர்களின் கொண்டாட்டங்கள் கலை கட்டும். அதிலும் ரஜினி, அஜித், விஜய், சூர்யா போன்றவர்களுக்களின் படங்களுக்காக பிரமாண்ட கட் -அவுட்கள், தங்களின் அபிமான நட்சத்திரங்களுக்கு பாலபிஷேகம் என பல வித்தியாசங்களையும் காட்டி வருகின்றனர் ரசிகர்கள்.

தற்போது நடிகர்களுக்கு சமமாக நடிகை சமந்தாவுக்கும் பிரமாண்டமான கட் - அவுட் வைக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 5ம் தேதி சமந்தா நடித்துள்ள "ஓ பேபி" படம் தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்காக சென்னையில் மிக பிரமாண்ட கட் - அவுட் வைக்கப்பட்டுள்ளது. தனது மிக பிரமாண்ட கட் அவுட் குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சமந்தா ரசிகர்களின் அன்பிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

0 Comments

Write A Comment