பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டு 6 ஆண்டுகளுக்கு பிறகு தனது தாய்நாட்டிற்கு திரும்பியா இந்தியர்.
சமூக வலைத்தளம் மூலம் அறிமுகமான தோழியை பார்க்க கடந்த 2012ம் ஆண்டு உரிய ஆவணம் இல்லாமல் பாகிஸ்தான் சென்றுள்ளார், மும்பையை சேர்ந்த ஹமீது அன்சாரி.
இந்நிலையில், உளவு பார்க்க வந்ததாக கூறி கைது செய்யப்பட்டு, விசாரணை காவலில் அடைக்கப்பட்டார். கடந்த 2015ம் ஆண்டு ராணுவ நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்ததை அடுத்து, சிறையில் அடைக்கப்பட்ட அன்சாரி, மத்திய அரசின் முயற்சிக்கு பிறகு நேற்று விடுவிக்கப்பட்டார்.
மேலும், வாகா எல்லையில் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட போது, தரையில் விழுந்து இந்திய மண்ணை வணங்கினார்.
0 Comments