ராஜஸ்தானை சேர்ந்த என்ஜினீயர் ஒருவர், பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு, இரண்டாண்டுகளுக்கு முன்னர், கேன்சல் செய்த டிக்கெட்டுக்கான பணத்தை தற்போது ரீ-ஃபண்ட் பெற்றுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் கோட்டா பகுதியில் வசித்து வருபவர் சுஜித். இவர், கோட்டாவில் இருந்து டெல்லிக்கு ரயிலில் செல்ல கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார். பின்னர், சொந்த காரணங்களுக்காக அந்த டிக்கெட்டை கேன்சல் செய்துள்ளார். அவரது டிக்கெட் தொகை ரூ.765, இதில் 65 ரூபாய் பிடித்தம் போக 700 ரூபாய் அவரது அக்கவுண்டிற்கு ரீ-ஃபண்ட் வந்திருக்க வேண்டும். ஆனால், அவருக்கு நூறு ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டு, ரூ.665 தான் வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, எஞ்சிய 35 ரூபாயை பெற அவர், ரயில்வே துறையிடம் கோரிக்கை வைத்துள்ளார். அவருக்கு ரூ.2 மட்டுமே ரீ-ஃபண்ட் ஆகியுள்ளது. தொடர்ச்சியாக மீதியுள்ள 33 ரூபாயை பெற, அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு முறை நேரில் சென்றும் கடிதம் மூலமாகவும் ரயில்வே துறைக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.
தற்போது இரண்டாண்டு கால போராட்டத்திற்கு பிறகு, அவர் அந்த 33 ரூபாயை ரீ-ஃபண்ட் பெற்றுள்ளார். இதற்காக ரயில்வேதுறையில் இருந்து, "நீங்கள் டிக்கெட் முன்பதிவு செய்த போது ஜிஎஸ்டி இல்லை. ஆனால் ஜூலை மாதம் நீங்கள் பயணிக்க இருந்த காலத்தில் ஜிஎஸ்டி அமலில் இருந்தது. அதன்படி, ஜிஎஸ்டி வரி 35 ரூபாய் உங்களுக்கு அதிகமாக பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போது அதற்கான விதிமுறைகள் மாறியுள்ளதால் உங்களுக்கு அந்த தொகை ரீ-ஃபண்ட் செய்யப்பட்டுள்ளது" என்று விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி தற்போது சமூகவ வலைத்தளங்கள், இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
0 Comments