தமிழகத்தைச் சேர்ந்த பாடிபில்டர் பாஸ்கரனுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அர்ஜூனா விருதை வழங்கி கௌரவித்தார்
டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்று வரும் தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழாவில் 19 வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்கி வருகிறார்.
இதில், பாரா தடகள வீராங்கனை தீபா மலிக்கிற்கும், மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியாவுக்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதினை குடியரசுத் தலைவர் வழங்கினார். சிறந்த பயிற்சியாளர்கள் விமல்குமார் - பேட்மிண்டன், சந்தீப் குப்தா - டேபிள் டென்னிஸ், மொஹிந்தர் சிங் - தடகளம் ஆகியோருக்கு துரோணாச்சார்யா விருதுகள் வழங்கப்பட்டது.
தமிழகத்தைச் சேர்ந்த பாடிபில்டர் பாஸ்கரனுக்கு அர்ஜூனா விருதும், விருதுடன் ரூ.5 லட்சத்திற்கான பரிசுத் தொகையையும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்
0 Comments