Tamil Sanjikai

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், 11,000 ரன்களை கடந்து இந்திய கேப்டன் விராட் கோலி உலக சாதனை படைத்துள்ளார்.

இன்று லண்டனில் உலகக்கோப்பை தொடரில் இந்திய - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

இந்திய அணி வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கே.எல்.ராகுல் அரை சதம், ரோஹித் சர்மா சதம் ஆகியவற்றைத் தொடர்ந்து விராட் கோலி அரை சதம் அடித்தார்.

அவர் 57 ரன்களை கடக்கும் போது, ஒருநாள் போட்டிகளில் 11,000 ரன்களை கடந்தார். மொத்தம் 222 இன்னிங்சில் 11,000 ரன்களை கடந்து விராட் கோலி உலக சாதனை படைத்துள்ளார். இதன்மூலமாக குறைவான போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்து, அவர் சச்சினின்(276 இன்னிங்ஸ்) சாதனையை முறியடித்துள்ளார்.

0 Comments

Write A Comment