Tamil Sanjikai

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து, தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல், முரளி விஜய் ஆகிய இருவரும் நீக்கப்பட்டுள்ளனர்.

கிறிஸ்துமசுக்கு மறு தினம் மெல்போர்னில் நடக்கும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. எனவே இதில் விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் இருந்து கே.எல்.ராகுல், முரளி விஜய் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் துவக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல், முரளி விஜய் இருவரும் சரியாக ரன் குவிக்காததன் காரணமாக அவர்களை பிசிசிஐ நீக்கியுள்ளது. அவர்களுக்கு பதிலாக மயங்க் அகர்வால், ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

உமேஷ் யாதவுக்கும் இடம் கிடைக்கவில்லை. காயத்தில் இருந்து அஸ்வின் மீளாததால், ரவீந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

0 Comments

Write A Comment