அடுத்த மாதம் முதல் டிவி, ஏசி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களின் விலை உயரக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி மற்றும் சுங்க வரி உயர்வு எதிரொலியாக, வீட்டு உபோயகப் பொருள் தயாரிப்பு நிறுவனங்களின் செலவு, கணிசமாக அதிகரித்துள்ளதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என பண்டிகைக் காலத்தில் வீட்டு உபயோகப் பொருட்களின் விற்பனை, அதிகமாக இருப்பது வழக்கம். இந்நிலையில், அடுத்த மாதம் முதல், டிவி, ஏசி, பிரிட்ஜ் போன்றவற்றின் விலை, 8 சதவீதம் வரை உயரும், என தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Comments