Tamil Sanjikai

தேஜாஸ் போர் விமானத்தில் பயணித்தார் இந்திய பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து..

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடைபெற்று வரும் சர்வதேச போர் விமானங்கள் கண்காட்சியை பார்வையிட்டார், பேட்மிண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை பிவி சிந்து . பின்னர் தேஜாஸ் போர் விமானத்தில் அவர் பயணித்தார்.

தேஜாஸ் போர் விமானமானது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இலகுரக போர் விமானம் ஆகும். நடுவானிலேயே எரிபொருளை நிரப்பிக் கொள்ளும் வசதி கொண்டது. இந்த போர் விமானத்தை, இந்திய விமானப் படையில் இணைக்க அண்மையில் ஒப்புதல் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment