Tamil Sanjikai

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியும் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேப்பியரில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 48.4 ஓவர்களில் அணைத்து விக்கெட்களையும் இழந்து 192 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 33 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து எளிதாக வெற்றி இலக்கை எட்டியது. இந்திய அணியில் ஸ்மிரிதி மந்தனா பந்துகளில் சதம் அடித்து கலக்கினார்.இவர் 104 பந்துகளில் 105 ரன்கள் குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார், 18 வயதான ஜெமைமா ரோட்ரிக்கஸ் 94 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

0 Comments

Write A Comment