ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளைநிலங்களை, இரவு நேரத்தில் பூச்சிகள் அதிகமாக தாக்கி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட வேளாண்மை துறை அதிகாரிகளிடம் இருந்து 50 சதவீத மானியத்துடன் விவசாயிகள் தானியங்கி விளக்குப்பொறிகளை வாங்கி விளைநிலங்களில் வைத்துள்ளனர்.
இந்நிலையில் விளைநிலங்களை பூச்சிகளிடம் இருந்து காக்க 50 சதவீத மானியத்துடன் வழங்கப்பட்ட தானியங்கி விளக்குப்பொறிகள் தரமற்ற முறையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆறு மாத உத்தரவாதத்துடன் வாங்கப்பட்ட தானியங்கி விளக்குப்பொறிகள், மூன்று மாதங்களிலேயே பழுதாகிவிட்டதாக கூறப்படுகிறது. இதனை சரி செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
0 Comments