Tamil Sanjikai

சீன வனவிலங்கு பூங்காவில் இருக்கும் 17 வயதான கோலா கரடியைப் காண சுற்றுலா பயணிகள் பலரும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தெற்கு சீனாவின் குவாங்சோ நகரத்தில் உள்ள பூங்காவில் 60 கோலா கரடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றைப் பார்க்க பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர்.

குறிப்பாக இந்த பூங்காவில் இருக்கும் உகி என்ற 17 வயதாகும் கோலா கரடியை காண பலர் ஆர்வம் காட்டுகின்றனர். ஒரு கோலா கரடியின் சராசரியாந வாழ்நாள் என்பது 10 முதல் 12 ஆண்டுகள் வரை தான் , எனவே இந்த கோலா கரடியை பூங்கா நிர்வாகிகள் சிறப்பு கவனத்துடன் பாதுகாத்து வருகின்றனர்.

உகி கரடி தனது குடும்பத்தில் 6 தலைமுறைகளை சேர்ந்த கரடிகளுடன் அந்த பூங்காவில் வாழ்ந்து வருகிறது.

இந்த கரடியின் முடி மற்றும் நிறத்தை வைத்து இதன் உடல் நலத்தை தினமும் கண்காணித்து வருவதாக பூங்கா காப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதன் பற்கள் அனைத்தும் 10 வயது கரடியின் பற்களை போல வலிமையாக இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

0 Comments

Write A Comment