Tamil Sanjikai

சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் டிக் டாக் செயலியை தடை செய்வது பைத்தியகாரத்தனம் என்று உயர்நீதிமன்றத் தீர்ப்பை விமர்சித்து, நடிகை கஸ்தூரிபேசி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இபிகோ 302 என்ற புதிய படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகை கஸ்தூரி டிக்டாக் செயலியை தடை செய்வது பைத்தியகார தனமான நடவடிக்கை என்று விமர்சித்தார்

மேலும், சில மாதங்களுக்கு முன்பு 800 ஆபாச வீடியோ இணையதளங்கள் தடைசெய்யப்பட்ட போது எதிர்த்தவர்கள், தற்போது டிக் டாக் செயலியை தடை செய்ய ஆதரிப்பது ஏன் என்பது தனக்கு தெரியும் என்றார் கஸ்தூரி.

தான் போலீஸ் வேடத்தில் நடித்துள்ள இந்த புதிய படத்தை பிரபலப்படுத்துவதற்காக தான் நடிகை கஸ்தூரி, நீதிமன்றத்தை விமர்சித்து பேசி இருப்பதாக கூறப்படும் நிலையில், கஸ்தூரி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படுமா ? என்ற கேள்வியம் எழுந்துள்ளது

0 Comments

Write A Comment