நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மற்றும் அவரது மனைவியை உதகையில் கடத்திவைத்திருந்த பைனான்சியர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூருவைச் சேர்ந்த மசூர் ஆலம் என்ற பைனான்சியரிடம், நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கோடிக்கணக்கில் கடன் வாங்கியுள்ளார், அதில் 95 லட்சம் ரூபாயை திருப்பிக்கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், தமது அடியாட்களுடன் சென்னை வந்த மசூர் ஆலம்,பவர்ஸ்டார் சீனிவாசனை உதகைக்கு கடத்திச் சென்றனர். பின்னர் பவர்ஸ்டாரின் மனைவி ஜூலியை உதகைக்கு வரவழைத்த அந்த கும்பல், அவரது பெயரில் அங்குள்ள பங்களாவை பத்திரப் பதிவு செய்து தர மிரட்டியுள்ளது.
இதனிடையே, ஜூலியை பிணையக் கைதியாக வைத்துக் கொண்டு பவர் ஸ்டாரை சென்னை அனுப்பிய அந்த கும்பல் ஊடகங்களில் இந்த செய்தி வராமல் பார்த்துக் கொள்ளுமாறு மிரட்டியுள்ளது.ஆனால், சென்னை வந்த பவர் ஸ்டார் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் உதகை சென்று ஜூலியை மீட்ட போலீசார், 5 பேரையும் கைது செய்து சென்னை அழைத்து வந்துள்ளனர்.
0 Comments