Tamil Sanjikai

மைக்ரோசாஃப்டின் இணை நிறுவனரான பால் ஆலன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தனது 65ஆம் வயதில் காலமானாா்.

ஆலன் பால் , மைக்ரோ சாஃப்டின் நிறுவனரான பில் கேட்ஸின் பால்ய நண்பர் ஆவாா். கல்லூரிப் படிப்பைப் பாதியில் நிறுத்திய இருவரும் 43 ஆண்டுகளுக்கு முன்னர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தைத் தொடங்கினர். ஆலன், நிறுவனத்தில் பல புதிய மாற்றங்களை கொண்டுவந்து மைக்ரோசாஃப்டை தனது 30 வயதுக்குள் புதிய உச்சம் தொட வைத்தாா்.

இதன் இடையில் புற்றுநோய் தாக்கியதால், வீட்டில் ஓய்வெடுத்து வந்த அவா் மீண்டும் தனது சகோதரியுடன் இணைந்து ஒரு தனியார் நிறுவனத்தைத் தொடங்கினார். ஆனால் மீண்டும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் தனது 65 -வது வயதில் ஆலன் காலமானார். அவரின் மறைவுக்கு மைக்ரோசாஃப்ட் சி.இ.ஓ சத்யா நாதெள்ளா இரங்கல் தெரிவித்துள்ளார்.

உலகின் 44-வது பணக்காரரான ஆலன், தனது பணத்தில் பெரும்பாலான தொகையை தர்ம காரியங்களுக்காகச் செலவிட்டது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment