வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா முன்னாள் வீரர் கபில் தேவின் சாதனையை முறியடித்துள்ளார்.
ஆசியாவுக்கு வெளியே கபில் தேவ் 155 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஹாமில்டனை வீழ்த்தியதன், (156 விக்கெட்டுகள்) மூலம் கபிலின் சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார் இஷாந்த் சர்மா. ஆசியாவுக்கு வெளியே 200 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளார் அனில் கும்ப்ளே.
இந்த போட்டியில் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற இன்னும் 423 ரன்கள் தேவைப்படுகிறது. ஆனால், இந்தியாவின் சிறப்பு பந்துவீச்சால் வெற்றி வாய்ப்பு இந்திய அணிக்கே பிரகாசமாக உள்ளது.
0 Comments