நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 10 சதவீத இடங்களை கூட கைப்பற்ற முடியாத பரிதாப நிலைக்கு பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டது. வெறும் 52 இடங்களை மட்டுமே காங்கிரஸ் வென்ற நிலையில், அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது பாரம்பரிய தொகுதியான அமேதியில் கூட அதிர்ச்சி தோல்வியைத் தழுவினார்.
தோல்வி குறித்து ஆராய்வதற்காக காங்கிரஸ் கட்சியின் காரியக்கமிட்டி கூட்டம் கடந்த 25-ந் தேதி நடந்தது. இதில் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது ராஜினாமா முடிவை அறிவித்தார். ஆனால் அதை காாரியக்கமிட்டி ஏற்க மறுத்து விட்டது. அத்துடன் கட்சி நிர்வாகத்தை முழுமையாக மாற்றி அமைக்க அவருக்கு அதிகாரம் வழங்கி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இருப்பினும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது முடிவில் மிகவும் உறுதியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அவர் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வரவில்லை. கடந்த 4 நாட்களாக கட்சித்தலைவர்கள் யாரையும் சந்திக்கவும் இல்லை.
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடி இனத்தைச் சேர்ந்தவரையோ அல்லது ஓ.பி.சி. பிரிவைச் சேர்ந்தவரையோ நியமிக்குமாறு மூத்த தலைவர்களிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
0 Comments