போயிங் விமானம் ஒன்று எரிபொருள் லாரியுடன் மோதுவது போன்ற வீடியோவை உண்மை என்று நம்பி பாகிஸ்தான் அரசியல் தலைவர் ஒருவர் எழுதிய ட்வீட் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
இணையத்தில் மிகவும் பிரபலமான வீடியோ கேம்கலீல் ஓன்று கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ 5. இந்த விளையாட்டில் விமானம் ஒன்று ஓடுதளத்தில் இருந்து மேலெழும்பும் போது எரிபொருள் நிரப்பிய லாரி மீது மோதுவது போல சித்தரிக்கப்பட்டிருந்தது. இதற்கான விளம்பரம் இணையத்தில் வெளியாகி இருந்தது.
இதனை உண்மைச் சம்பவம் என்று நம்பி பீதியடைந்த பாகிஸ்தான் அவாமி தெஹ்ரீக் கட்சியின் பொதுச் செயலாளர் குர்ரம் நவாஸ், விமானம் பெரும் விபத்தில் இருந்து தப்பி விட்டதாகவும் இதற்கு விமானியின் சாமர்த்தியமே காரணம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து இது விளையாட்டு என்பதை பலரும் எடுத்துச் சொன்ன பின்னரே தனது பதிவை அவர் நீக்கியுள்ளார்.
0 Comments