Tamil Sanjikai

தமிழக சட்டப்பேரவையில் இன்று காலை 2019 - 20- ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் அதன் படி பள்ளிக்கல்வித்துறைக்கு 28 ஆயிரத்து 757 கோடியே 62 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மின்சாரத்துறைக்கு 18 ஆயிரத்து 560 கோடியே 77 லட்சம் ரூபாயும், உள்ளாட்சித்துறைக்கு 18 ஆயிரத்து 273 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத்துறைக்கு 13 ஆயிரத்து 605 கோடி ரூபாயும், சுகாதாரத்துறைக்கு 12 ஆயிரத்து 563 கோடியே 83 லட்சம் ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயத்துறைக்கு 10 ஆயிரத்து 550 கோடியே 85 லட்சம் ரூபாயும் காவல்துறைக்கு 8 ஆயிரத்து 84 கோடியே 80 லட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment