Tamil Sanjikai

தமிழ் சினிமாவில் சமீப காலமாக தலைவர்களின் வாழ்க்கை வரலாறு சினிமாக்களாக எடுக்கப்படுகின்றன. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் வாழ்க்கை வரலாறு படங்களாக எடுக்கப்பட முயற்சிகள் நடக்கின்றன. ஜெயலலிதாவின் வாழ்க்கையை மட்டும் 4 இயக்குனர்கள் படமாக்க திட்டமிட்டு பணிகளை தொடங்கி உள்ளனர்.

தலைவர்கள் வரிசையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையும் படமாக உருவாக இருக்கிறது. ஸ்டூடியோ 18 என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இதில் பிரபாகரனாக நடிகர் பாபிசிம்ஹா நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு `சீறும் புலி' என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தை மறைந்த இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்த ஜி.வெங்கடேஷ் குமார் இயக்குகிறார். இவர் ஏற்கனவே உனக்குள் நான், லைட்மேன் ஆகிய படங்களையும் இலங்கையில் நடந்த கடைசிகட்ட போரை மையமாக வைத்து நீலம் என்ற படத்தையும் இயக்கியவர். நீலம் படம் தணிக்கை அதிகாரிகளால் தடை செய்யப்பட்டுள்ளதால் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பிரபாகரனின் பிறந்தநாளான நேற்று சீறும் புலி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. பாபி சிம்ஹா, பிரபாகரன் தோற்றத்தில் இருக்கும் அந்த போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

0 Comments

Write A Comment