கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியான, பாண்டிப்போரா மாவட்டத்தில் காஷ்மீரின் குரேஸ் துறைக்கு சென்று அங்கு படை வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார். 2016 -ம் ஆண்டு பிரதமர் மோடி ஹிமாச்சல பிரதேசத்தில் தீபாவளியை கொண்டாடினார். இது போல 2015டீ-ம் ஆண்டு, பிரதமர் மோடி அமிர்தசரசில் ராணுவ வீரர்களுடன் சேர்ந்து தீபாவளி கொண்டாடினார். கடந்த 2013 ஜூன் மாதம் ஏற்பட்ட புயலால் பாதிக்கபட்ட கேதார்நாத்தில் பல்வேறு மறு கட்டமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. கேதார்புரி மறுகட்டமைப்புப் பணிகளை பிரதமர் ஆய்வு செய்யவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. கேதார்புரி திட்டத்துக்கு பிரதமர் மோடி கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டினார். இந்த ஆண்டு கேதார்நாத் செல்லும் பிரதமர் அங்கு தீபாவளியை கொண்டாடுகிறார். கேதார்நாத் கோவிலில் பிரதமர் மோடி 2 மணி நேரம் வழிபாடு செய்யவுள்ளதாக தெரிகிறது.
0 Comments