73 பயணிகள், 5 விமான சிப்பந்திகள் என மொத்தம் 78 பேரை ஏற்றிக்கொண்டு, சூப்பர் ஜெட் விமானம் ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து முர் மாஸ்கான் என்ற இடத்திற்கு புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக விமானநிலையத்துடன் தொடர்பு கொண்டு மீண்டும் தரையிறங்க முற்பட்டது.
விமானம் தரையிறங்கும் போது எதிர்பாரத விதமாக தீ பிடித்து எரிந்தது. விமானத்தில் பயணம் செய்தவர்களில் 37 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். எனினும் இந்த விபத்தில் 41 பேர் பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. 11 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும் என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானத்தில் பலியான குடும்பத்தினர்களுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரங்கலை தெரிவித்துள்ளார். விபத்தின் போது விமானம் தீ பிடித்து கரும்புகைகள் வெளியேறும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. விபத்தையடுத்து, மாஸ்கோவுக்கு வரும் விமானங்கள் திருப்பி விடப்பட்டன.
0 Comments