விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவற்றை பேங்க் ஆப் பரோடாவுடன் இணைக்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கையை எதிர்த்து பொதுத்துறை வங்கிகள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர், அதனால் வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கி ஊழியர் சங்கங்கள் நடத்தும் போராட்டத்தில் சுமார் 10 லட்சம் வங்கி அதிகாரிகளும் ஊழியர்களும் ஈடுபடுகின்றனர்.தனியார் வங்கிகள் வழக்கம் போல் இயங்கும் என்பதால் ஓரளவுக்கு வாடிக்கையாளர்களின் பணப்பரிமாற்றம் மற்றும் ஏடிஎம் சேவைகளில் பாதிப்பு இருக்காது.
இதே காரணத்திற்காக கடந்த வெள்ளியன்று பொதுத்துறை வங்கி அதிகாரிகள் வேலைநிறுத்தம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
0 Comments