Tamil Sanjikai

அடிலெய்டிலில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டிக்கான 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டி-20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. ஆஸ்திரேலிய லெவன் மற்றும் இந்திய அணிகள் இடையிலான பயிற்சி ஆட்டமும் சமனில் முடிந்தது.

இரு அணிகள் மோதும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் ஆகியோர் இன்று கூட்டாக ‘பார்டர்-கவாஸ்கர்’ டெஸ்ட் தொடருக்கான கோப்பையை அறிமுகம் செய்தனர். ஆஸ்திரேலிய அணியில், மார்கஸ் ஹேரிஸ், ஆரோன் ஃபிஞ்ச், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், டிராவிஸ் ஹெட், டிம் பெய்ன் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), பேட் கம்மின்ஸ், மிச்செல் ஸ்டார்க், நாதன் லியோன், ஜோஷ் ஹாஸில்வுட் (துணை கேப்டன்) ஆகியோர் அறிவிக்கப்பட்டள்ளனர்.

ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்ட ஒரு மணிநேரத்தில் 12 பேர் கொண்ட இந்திய டெஸ்ட் அணியும் அறிவிக்கப்பட்டது. இந்திய அணியில் விராட் கோலி (கேப்டன்), ரஹானே (துணைக் கேப்டன்), கே.எல். ராகுல், முரளி விஜய், புஜாரா, ரோகித் சர்மா, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் கொண்ட இந்த அணியில் இருந்து ஒரு பேட்ஸ்மேன் நீக்கப்பட இருக்கிறார். அவர் யார் என்பது டாஸ் போட்டபின்பு தான் தெரிய வரும்.

0 Comments

Write A Comment