Tamil Sanjikai

நாடு முழுவதும் மருத்துவம், பல் மருத்துவம் படிப்பிற்கான நுழைவுத்தேர்வு தான் நீட். இந்த தேர்வுகள் மே மாதம் 5ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த ஆண்டு நீட் தேர்வுக்காக சுமார் 15 லட்சம் மாணவ மாணவிகள் பெயர் பதிவு செய்துள்ளனர்.

நீட் நுழைவுத் தேர்வுக்கு வரும் மாணவ மாணவிகள் கடைபிடிக்க வேண்டிய உடைகள் குறித்து, தேசிய தேர்வு ஏஜன்சியான NTA அண்மையில் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இதன்படி புர்கா, தலைப்பாகை போன்றவற்றை அணிபவர்கள் அது குறித்து தங்கள் விண்ணப்பத்திலேயே குறிப்பிட்டு உரிய அனுமதி பெற வேண்டும் என்றும், சோதனைகளுக்காக தேர்வுக்கு ஒன்றரை மணி நேரம் முன்பே ஆஜராக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரைக்கை சட்டைகள், அடர்த்தியான நிறம் இல்லாமல் மென்மையான நிறங்களில் ஆடைகள் அணிய வேண்டும் என்றும், பெல்ட், டிஜிட்டல் வாட்சுகள் அணியக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment