Tamil Sanjikai

வடதமிழகம் மற்றும் கிழக்கு ஆந்திராவில் ஏப்.30 மற்றும் மே 1-ம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:- “ காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்போது சென்னை தென்கிழக்கே 1490 கி.மீ தொலைவிலும், மசூலிப்பட்டினத்திற்கு தென்மேற்கே 1760 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது

அடுத்த 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறும். இது வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 30-ம் தேதி வடதமிழகம் மற்றும் கிழக்கு ஆந்திர கடல்பகுதியை நெருங்கும். வடதமிழகம் மற்றும் கிழக்கு ஆந்திராவில் ஏப்.30 மற்றும் மே 1-ம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் வரும் 28-ம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

0 Comments

Write A Comment