கோவையில் நேற்று போலீஸ் வாகனம் மோதியதில் பெண் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகரம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் நேற்று ஐந்தாவது நாள் ஊர்வலமாக சென்று முத்தன்ன குளத்தில் கரைக்கப்படும். இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு இன்று காலை ராஜவீதி தேர்நிலைதிடல் பகுதியில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க பாதுகாப்பு பணிகளுக்காக ஏராளமான போலீஸார் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர்.
போலீஸ் வாகனம் அங்கு பாதுகாப்பு பணிக்காக காவலர்களை இறக்குவிட்டு கிளம்பும்போது எதிர்பாராத நிலையில் நடந்து செல்லும் பெண் மீது மோதி விபத்து ஏற்படுத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. போலீஸ் வாகனத்தை தாண்டி பெண் சென்ற போது, அதை கவனிக்காமல் ஓட்டுநர் வாகனத்தை இயக்கியுள்ளார். அதில் சற்று தூரம் தள்ளிச்செல்லப்படும் பெண் மீது வாகனம் ஏறியதில் அந்த பெண் பரிதபமாக உயிரிழந்தார்.
பெரிய கடை வீதி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் உயிரிழந்த பெண் பேரூர் பகுதியை சேர்ந்த கலா என்பது தெரியவந்தது. மேலும் 55 வயதான அவர் ரங்கே கவுடர் வீதியில் உள்ள ஒரு பொறிக்கடையில் வேலை பார்த்து வந்ததும், இன்று காலை வேலைக்கு செல்ல பேருந்தில் இருந்து இறங்கி நடந்து சென்ற போது விபத்து ஏற்பட்டது பலரையும் அதிர்ச்சி அடைய செய்த்துளது. மேலும் விபத்து நடைபெற்ற சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
0 Comments