Tamil Sanjikai

மக்களவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக அமோக வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம், தொடர்ச்சியாக இரண்டாவது முறை வெற்றிபெற்று பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார்.

மோடி மீண்டும் பதவியேற்க உள்ள நாள், நேரம் மற்றும் கடந்த முறையைப் போல அயல்நாட்டுத் தலைவர்கள் யாரேனும் அழைக்கப்பட உள்ளனரா என்ற விவரங்கள் ஏதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், வரும் 30ஆம் தேதி பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக வரும் ஞாயிறன்று குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சி அமைக்க மோடி உரிமை கோர உள்ளதாக கூறப்படுகிறது.

பிறகு வரும் 30ந் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவருக்கு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக தாம் வெற்றி பெற்ற வாரணாசி தொகுதிக்கும், தமது சொந்த மாநிலமான குஜராத்துக்கும் பிரதமர் மோடி செல்ல இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Comments

Write A Comment