Tamil Sanjikai

இந்திய வான் எல்லைக்குள் நுழைய முயன்ற 2 பாகிஸ்தான் விமானங்களை, இந்திய விமானங்கள் திருப்பி தாக்கியதால் திரும்பி சென்றன. திரும்பி செல்லும் போது போர் நிறுத்த ஒப்பந்த பகுதியில் பாகிஸ்தான் விமானங்கள் 4 இடங்களில் குண்டு வீசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் 3 கிலோமீட்டர் தூரம் விரட்டிச் சென்று நவ்சார பகுதியில் பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தி உள்ளது.

இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் குண்டு வீசியதாக தகவல் வெளியான நிலையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

0 Comments

Write A Comment