Tamil Sanjikai

ரஷ்யாவின் மனித வடிவிலான ரோபா சர்வதேச விண்வெளி மையம் சென்றடைந்தது. கஜகஸ்தான் நாட்டின், பாய்கோர் மாகாணத்தில் உள்ள, ரஷ்யாவின் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து, சோயுஸ் எம் எஸ்-14 என்ற ஆளில்லா விண்கலம் அனுப்பப்பட்டது. இதில், 'ஃபெடோர்' என்ற மனித உருவ ரோபோவும் அனுப்பப்பட்டது.

இந்த ரோபோ, சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு, அவசர காலங்களில் உதவி செய்வதற்காக, 10 நாட்கள் பயிற்சி மேற்கொள்ள இருக்கிறது. 1.8 மீட்டர் உயரமும், 160 கிலோ எடையும் கொண்ட இந்த ரோபோ, ஸ்கைபோட் எஃப் 850 என்ற அடையாள எண்ணுடன் அனுப்பப்பட்டு உள்ளது.

இது, மின் இணைப்புகளை சரி செய்தல், தீயணைப்பான்களை பயன்படுத்துதல் போன்ற பணிகளை, விரைவாகச் செய்யும். சர்வதேச விண்வெளி மையத்திற்கு, ஏற்கனவே, அமெரிக்கா மற்றும் ஜப்பான், மனித வடிவிலான ரோபோவை அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment