மகாராஷ்டிர மாநிலம் வார்தா அருகே வெடிபொருட்கள் சேமித்து வைக்கும் கிடங்கு ஒன்றில் நடந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
இந்திய ராணுவத்துக்கு சொந்தமான வெடிபொருட்கள் சேமித்து வைக்கும் கிடங்கு மகாராஷ்டிர மாநிலம் வார்தா அருகே அமைந்துள்ளது. இந்த கிடங்கையொட்டியுள்ள மைதானதில் தேவையற்ற வெடிபொருட்கள் அழிக்கப்படுகின்றன. இந்தநிலையில், இன்று காலை 15 ஒப்பந்த தொழிலாளர்கள் இந்த சேமிப்பு கிடங்கிலுள்ள வெடிமருந்து பொருட்களை இறக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
வெடிமருந்துகள் அடங்கிய பெட்டிகளை தொழிலாளர்கள் இறக்கி வைத்தபோது, ஒரு பெட்டி திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் பெட்டிகளை இறக்கி வைக்கும் பணியை செய்த தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்டனர்.
உடனடியாக அங்கிருந்துவர்கள் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்களும், போலீஸாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மருத்துவமனையில் பலத்த காயங்களுடன் சேர்க்கப்பட்ட 16 பேரில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்றும், 10 பேர் தீவிர சிகிச்சை பெற்றுவருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். விபத்து நடந்த பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
0 Comments