Tamil Sanjikai

பெல்ஜியம் அணிக்கு எதிரான ஹாக்கி போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா - பெல்ஜியம் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஆடவர் ஹாக்கி தொடர் பெல்ஜியத்தில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பெல்ஜியம் அணியுடன் மோதிய இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

போட்டியின் இரண்டாம் பாதியில், 39ஆவது நிமிடத்தில் மந்தீப் ஒரு கோலும், 54 ஆவது நிமிடத்தில் அக்‌ஷ்தீப்சிங் ஒரு கோலும் அடித்து, அணியை வெற்றி பெறச்செய்தனர். இந்த வெற்றியின் மூலம் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி செப்டம்பர் 28ஆம் தேதி தொடங்குகிறது.

0 Comments

Write A Comment