Tamil Sanjikai

2019 நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதன்படி முதற்கட்ட தேர்தல் கடந்த 11ந்தேதி தொடங்கியது. தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18ந்தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருந்தது.

இதுதவிர்த்து தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கு வருகிற மே 19ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் கடந்த 9ந்தேதி அறிவிப்பு வெளியிட்டது. அதற்கான வாக்கு எண்ணிக்கை மே 23ல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்தலை முன்னிட்டு தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளன, மேலும் அதை கண்காணிக்க சிறப்பு பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், நகை உள்ளிட்ட பொருட்களை பறக்கும் படை பறிமுதல் செய்து வருகிறது.

இந்நிலையில், தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வீடு, அவரது மகன் கதிா் ஆனந்தால் நிா்வகிக்கப்படும் பள்ளி, கல்லூாி ஆகிய பகுதிகளில் கடந்த மாதம் வருமான வரித்துறை அதிகாாிகள் சோதனை மேற்கொண்டனா். மேலும் துரைமுருகனுக்கு நெருக்கமான சீனிவாசன் உள்ளிட்டோருக்கு சொந்தமான பகுதிகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் சுமார் 11 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடா்பாக வருமான வரித்துறை அதிகாாிகள் தோ்தல் ஆணையத்திடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளனா். இந்நிலையில், வேலூர் ஆம்பூர் பகுதியில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அம்பேத்கர் சிலைக்கு இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின் வேட்பாளருடன் அப்பகுதியில் நடந்து சென்று மக்களிடம் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.

இதன்பின் குடியாத்தம் பகுதியில் ஸ்டாலின் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் பேசும்பொழுது, வேலூர் தொகுதியில் தேர்தலை நிறுத்தவே வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுகிறது என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

0 Comments

Write A Comment